வேயே திரண்மென்றோள் வில்லே கொடும்புருவம்
வாயே வளர்பவளம் மாந்தளிரே மாமேனி
நோயே முலைசுமப்ப தென்றார்க் கருக்கிருந்தா
ரேயே யிவளொருத்தி பேடியோ வென்றா
ரெரிமணிபூண் மேகலையாள் பேடியோ வேன்றார்
காந்தருவதத்தையார் இலம்பகம் பாடல்– 651
—- சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்துக்குப் பின்னர் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. சோழர் காலத்தில் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டது. திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்ட இக் காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது பாடல் விளக்கம் : வித்தியாதர நகரத்து அரசன் கலுழவேகன் மகள் தத்தை . அவளின் சுயம்வரத்தில் தத்தையின் யாழிசையில் பல மன்னர்கள் தோற்றுப் போகிறார்கள். தாங்கள் தோற்றத்தற்கு காரணம் இளவரசி தத்தையின் தோழி வீணாபதி என்னும் திருநங்கையர் தான் என எண்ணி வீணாபதியை கேலி செய்கின்றனர் “இவளின் தோள்கள் உருண்டு மூங்கில் போல உள்ளது. வாயே கடலில் விளையும் பவளம் போல உள்ளது. இவளது புருவம் கொடும் வில் போன்று உள்ளது , “மேனியோ மாந்தளிர் போல உள்ளது ” ஆனால் , அவள் மார்பு பெருத்து அது நோய் போல அல்லவா உள்ளது, ஒருவேளை இவள் பேடியாக (திருநங்கையாக ) இருப்பாளோ “ என வீணாபதியின் மார்பபை நோய் எனவும் வீணபதியை பேடி எனவும் கேலி செய்கின்றனர்.
Civaka Cintamani is one of the five great Tamil epics. Authored by a Madurai-based Jain ascetic Tiruttakkatēvar in the early 10th century, the epic is a story of a prince Chivagan, who is the perfect master of all arts, perfect warrior.
Song description: Datta, daughter of King Kaluzhavegan of Vithiyadhara city. In her suyamvaram many kings are defeated by Datta's Yaazhisai. They make fun of Veenapati, thinking that the reason for their loss is Princess Datta's friend Veenapati, a transgender.
“Her shoulders are rounded and like bamboo. The mouth is like a coral growing in the sea. Her brow is like a bow " body looks like Manthalir" but her chest is enlarged and it is a disease, Veenapati as Bedi, like they make fun of Veenapati's chest as her gender.
– Kantharuvadattaiyar Ilampagam Song– 651 – Civaka Cintamani