இந்தியா முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் , தங்கள் அதிகாரத்திற்கு எதிராக போராடிய இனக்குழுக்களை அடக்குவதற்காக 1871ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி குற்றப் பழங்குடியினர் சட்டம் “(Criminal Tribes Act) என்ற கொடிய சட்டத்தை நிறைவேற்றினர். திருநங்கையர்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தில் இந்த சட்டப்பிரிவில் அவர்களும் சேர்க்கப்பட்டனர். இச்சட்டத்தின்படி திருநங்கை மக்கள் சந்தேகத்திற்குரியவர்களாக கருதப்பட்டனர். Registers of Eunuchs “என்ற பதிவேட்டை மாவட்டம் முழுவதும் உருவாக்கி, அதில் திருநங்கைகளின் இருப்பிடம், வயது, அடிக்கடி செல்லும் இடங்கள், பாலின மாற்று அறுவைசிகிச்கை செய்த வயது, வாழ்வாதார நிலை மற்றும் பொருளாதார பரிவர்த்தனைகள் போன்ற அனைத்து தகவல்களும் உள்ளூர் அதிகாரிகளால் பதியப்பட்டன. வட மாநிலங்களில் திருநங்கைகளின் பாரம்பரிய நிகழ்வான , வீட்டு நிகழ்வுகளில் நடனமாடுவது தடை செய்யப்பட்டது , இதனை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார் அல்லது அபராதம் செலுத்தவேண்டும் என்று சட்டத்தில் எச்சரிக்கை செய்யப்படிருந்தது. மேலும் திருநங்கையர் சமூகத்தின் அடிப்படை ஆதாரமான குடும்ப கட்டமைப்பை குலைக்கும் நடவடிக்கைளிலும் ஈடுப்பட்டது இந்தச் சட்டம். இதனால் சொல்லாண்ணா துயரத்து ஆளாகினர் திருநங்கையர்கள்.
The British, who brought the whole of India under their rule, passed the deadly Criminal Tribes Act on October 12, 1871 to suppress the ethnic groups that fought against their rule. Trans people were also included in this act because of the in the wrong perspective of British rulers. Transgender people were considered suspect under this law. "Registers of Eunuchs" were created district-wide, in which all information such as location, age, frequented places, age of gender reassignment surgery, living conditions and economic transactions of transgender people were recorded by the local authorities. Dancing at house functions, a traditional event for transgender people in northern states, was banned, and the law warned that violators would be arrested or fined. The law also involved in destroying the family structure which is the basic foundation of the transgender community Due to this, the transgenders suffered untold grief.
