Shilpa Shastras – Ali Stone (Trans women stone)
இந்து சமயக் கோவில்களின் கட்டுமானங்கள் , கட்டிடக்கலை விதிகளின் அடிப்படையிலும் மற்றும் சிற்பங்கள் ,சிற்ப சாஸ்திர அடிப்படையிலும் உருவாக்கபடுகின்றன. சிற்ப சாஸ்திர கோட்பாட்டின்படி, பூமியில் உள்ள கற்களின் தன்மை அடிப்படையில் அவைகள் மூன்றுப் பாலினமாக பிரிக்கப்பட்டு, அதற்கான கல்லில் சிலைகள் வடிக்கப்படுகின்றன.
கோயில் கட்டுமானத்தில் சிற்ப சாஸ்திர விளக்கத்தின் அடிப்படையில் பாறைகற்கள் உச்சி முதல் பாதம் வரை ஒரே சீராகவும் நிறம் மாறாமலும் உறுதித்தன்மையோடும் இருந்தால் அந்த கற்கள் புருஷ சிலா அதாவது ஆண் கற்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்த கற்களில் உளி கொண்டு தட்டினால் இதிலிருந்து ஓசை வலுத்து எழும். இந்த கற்களைக் கொண்டுத்தான் ஆண் சிவபெருமான், விஷ்ணு ,பெருமாள் போன்ற ஆண் தெய்வங்களின் சிலைகளை செய்வர்.
அடியில் பெருத்து போகப்போக நுனியில் சிறுத்து இருந்தால் அது பெண்கல் “ஸ்திரி சிலா” எனப்படுகிறது . இந்த கல்லும் உறுதித் தன்மையோடு தான் இருக்கும். இந்த கல்லினை தட்டினால் நாதம் மிக இனிமையான இசையாக இருக்கும் .அத்துடன் ஓசையின் அளவு நீண்டு இருக்கும் .இந்த கல்லில் அம்பாள் உள்ளிட்ட பெண் சிலைகளை வடிப்பர் மூன்றாவதாக இருப்பது “அலிகற்கள்” அல்லது “நபும்சிலா” . இந்த கற்கள் உறுதியோடு இருக்கும், நாதம் இருக்கும் ஆனால் அதில் நீட்சி இருக்காது. இந்த கல், சிலைகள் தவிர்த்து கர்ப்பக்கிரகங்கள் உள்ளிட்ட கோயில் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஆகவே ஒரு ஆலயத்தின் கட்டுமானத்திற்கு இடத் தேர்வு, காலத்தேர்வு அத்துடன் கற்களை தேர்வு செய்யும் நடைமுறையும் இருந்துள்ளது அத்துடன் அவைகளை பயன்படுத்தும் முறைகளை பற்றி தெளிவாக சொல்லியுள்ளது சிற்ப சாஸ்திரம்.
The constructions of Hindu temples are made based on the rules of architecture and the sculptures are made on the basis of sculpture. According to the theory of sculpture, based on the nature of the stones in the earth they are divided into three sexes and idols are cast in the corresponding stone. According to the interpretation of Shilpa Shastras in temple construction, if the stones are uniform from the top to the foot, discoloration and firmness, then those stones are called Purusha Sila i.e. male stones. If there is a small narrow at the tip which is going to expand at the bottom, it is called "Stir Sila". This stone is also stable. If you tap this stone, the music will be very sweet and the volume of the sound will be longer. The third one is “Ali stone” or “Nabumsila”. These stones are firm and have a music sound but no stretch. Apart
from idols, this stone is used in temple constructions including Garbhagraha. So, there is a process of selection of place, selection of time and selection of stones for the construction of a temple and the method of using them has been clearly explained in Shilpa Shastra.